பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பினை வலியுறுத்தி ஸ்டிக்கர்களை ஒட்டிய அக்கரைப்பற்று கொரோனா செயலணி ! - News View

About Us

About Us

Breaking

Friday, August 20, 2021

பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பினை வலியுறுத்தி ஸ்டிக்கர்களை ஒட்டிய அக்கரைப்பற்று கொரோனா செயலணி !

(நூருல் ஹுதா உமர், றிஸ்வான் சாலிஹு)

கொவிட்-19 வைரஸ் நாட்டில் தீவிரமடைந்துள்ள நிலையில் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் அனர்த்த முகாமைத்துவக் குழு ஏற்பாடு செய்த கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம் அக்கரைப்பற்று பஸ் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் நடைபெற்றது .

இவ்விழிப்புணர்வில் தற்காலத்தில் கடுமையான வீரியத்துடன் பரவும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பதாகை சகல இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டதுடன் , பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பினை வலியுறுத்தும் ஸ்டிக்கர்களும் பொது போக்குவரத்து பஸ்களில் ஒட்டப்பட்டன .

அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸகி, அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாசீக், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம்.சபீஸ், அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ. காதர், அனர்த்த முகாமைத்துவ குழு உறுப்பினரும், முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான சிறாஜ் மஸ்ஹூர், 241 இராணுவ படைப்பிரிவின் உயரதிகாரி, பொலிஸ் நிலைய உயரதிகாரி, அனர்த்த முகாமைத்துவ குழு உறுப்பினர்கள், அக்கரைப்பற்று ஜும்ஆ பள்ளிவாசல்கள் நிர்வாகத்தினர், பிரதேச முக்கியஸ்த்தர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .

No comments:

Post a Comment