மரணங்களை கட்டுப்படுத்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் - வைத்தியர் லக்குமார் பெர்ணாந்து - News View

About Us

About Us

Breaking

Monday, August 30, 2021

மரணங்களை கட்டுப்படுத்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் - வைத்தியர் லக்குமார் பெர்ணாந்து

(எம்.ஆர்.எம்.வசீம்)

அதிகரித்து வரும் கொவிட் மரணங்களை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். தற்போதைய கட்டுப்பாடு போதுமானதாக இல்லை என விசேட வைத்திய நிபுணர்களின் சங்கத்தின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்ணாந்து தெரிவித்தார்.

நாடு முடக்கப்படுள்ள நிலைமையிலும் கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கையில் கொவிட் நோயாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையை உலகில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் மிகவும் அதிகரித்த வீதத்தையே காட்டுகின்றது. இந்த நிலைமையை கட்டுப்படுத்திக் கொள்ள கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும்.

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றது என்றாலும், பொதுமக்கள் இது தொடர்பாக எந்த சிந்தனையும் இல்லாமல் செயற்படுவதை காண்கின்றோம். இது மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment