தம்பானே பழங்குடியினர் 44 பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Monday, August 30, 2021

தம்பானே பழங்குடியினர் 44 பேருக்கு கொரோனா

பதுளை மாவட்டத்தின் ஆதிவாசிகள் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மகியங்கனை பொது சுகாதாரப் பரிசோதகப் பணியகம் இன்று 30.8.2021 தெரிவித்துள்ளது. 

பதுளை மாவட்டத்தின் ஆதிவாசிகள் கிராமமான “தம்பானே” யில் மேற்கொள்ளப்பட்ட “ரெபிட் என்டிஜன்“ பரிசோதனையின் போதே, மேற்படி தொற்று உறுதியாக்கப்பட்டுள்ளது. 

இதன் போது ஆதிவாசிகள் 115 பேருக்கு மேற்படி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஆதிவாசிகள் தலைவர் ஊருவரியலாகே வன்னியலததோவின் மனைவி  மற்றும் அவரது சகோதரர்கள், உறவினர்கள் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இவர்களில் ஆதிவாசிகள் தலைவரது மனைவி உள்ளிட்ட தொற்று தீவிரமடைந்திருக்கும் ஒன்பது பேர் மகியங்களை கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

ஏனைய தொற்று உறுதியான அனைவரும் தத்தம் குடில்களிலேயே பொது சுகாதாரப் பரிசோதகர்களின் கண்காணிப்பில் சுய தனிமைப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஆதிவாசியொருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

.பதுளை மாவட்டத்தில் ஆரம்பம் முதல் இன்று வரையில்  259 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக, பதுளை மாவட்ட சுகாதார சேவையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் 18630 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் . 

பதுளை 39 பேர், பண்டாவரவளை 27 பேர், எல்ல 06 பேர், கிராந்துருகோட்டை 15 பேர், ஹள்துமுள்ளை 04 பேர், ஹாலிஎல 32 பேர் ஹப்புத்தளை 20 பேர், கந்தகெட்டிய 02 பேர், லுணுகலை 07 பேர், மகியங்கனை 111 பேர், மீகாகிவுல 05 பேர், பசறை 17 பேர், ரிதிமலியத்த 07 பேர், அசளக்க 04 பேர், ஊவாபரனகம 2 பேர், வெலிமட 38 பேர் என பதுளை மாவட்டத்தில் இன்றுவரை 259 பேர் உயிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment