இன்று (20) இரவு 10.00 மணி முதல் 10 நாட்களுக்கு முழு இலங்கையும் முடக்கம் : அத்தியாவசிய சேவைகள் வழமை போன்று : தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு பாதிப்பு இல்லை - News View

About Us

About Us

Breaking

Friday, August 20, 2021

இன்று (20) இரவு 10.00 மணி முதல் 10 நாட்களுக்கு முழு இலங்கையும் முடக்கம் : அத்தியாவசிய சேவைகள் வழமை போன்று : தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு பாதிப்பு இல்லை

இன்று (20) இரவு 10.00 மணி முதல் எதிர்வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரையான 10 நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் முடக்க நிலை (Lockdown) அமுல்படுத்தப்படுவதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.

கொவிட்-19 பரவலின் உக்கிரத்தைத் தொடர்ந்து அஸ்கிரி, மல்வத்து மகாநாயக்கர்கள், ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் விடுத்து வேண்டுகோளை அடுத்து குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றையதினம் (20) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொவிட்-19 செயலணி கூட்டத்தில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறையில் இருந்த போதிலும், அத்தியாவசிய சேவைகள் வழமை போன்று இடம்பெறுமென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

குறித்த காலப் பகுதியில், நாடு முழுவதும் இராணுவம் மற்றும் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் எவ்வித தடங்கலுமின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளளார்.

அந்த வகையில் 60 வயதுக்கு மேற்பட்ட, இதுவரை தடுப்பூசி பெறாவர்களுக்காக விசேட தடுப்பூசி வழங்கும் திட்டமும் இக்காலப் பகுதியில் முன்னெடுக்கப்படுமென அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment