எம்.மனோசித்ரா
விசேட அதிரடிப் படையினரால் நேற்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 3897 கிலோ கிராம் கழிவுத் தேயிலை மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
விசேட அதிரடிப் படையினரால் தெஹிவளை பிரதேசத்தில் 41 கிராம் ஹெரோயினுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் பயணித்த மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் உதயங்க நோர்த் சோபா என்பவராவார்.
வெலம்பொட பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 3897 கிலோ கிராம் கழிவுத் தேயிலையுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெலம்பொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தேயிலை சபையின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த சந்தேகநபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment