அமெரிக்க இளம் டென்னிஸ் வீராங்கனைக்கும் கொரோனா : டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியிட மாட்டார் - News View

Breaking

Post Top Ad

Monday, July 19, 2021

அமெரிக்க இளம் டென்னிஸ் வீராங்கனைக்கும் கொரோனா : டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியிட மாட்டார்

அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரமான கோகோ காஃப் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். இதனால் அவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியிட மாட்டார் என்றும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

17 வயதான காஃப் இந்த தகவலை ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் அறிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் குறிப்பிடத்தக்க பங்கெடுத்தலுக்கு பிறகு இது காஃப்பின் முதல் ஒலிம்பிக் தோற்றமாக இருந்தது. எனினும் தற்சமயம் அவருக்கு இந்த வாய்ப்பு கைநழுவிப் போயுள்ளது.

"நான் கொவிட்க்கு சாதகமாக பரிசோதித்தேன், அதனால் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட முடியாது என்ற செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் ஏமாற்றமடைகிறேன்"

"ஒலிம்பிக்கில் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்துவது எப்போதுமே என்னுடைய கனவாகவே இருந்தது, எதிர்காலத்தில் இதை நனவாக்க எனக்கு இன்னும் பல வாய்ப்புகள் இருக்கும் என்று நம்புகிறேன்." என்று காஃப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெனிபர் பிராடி, ஜெசிகா பெகுலா மற்றும் அலிசன் ரிஸ்கே ஆகியோருடன் 12 பேர் கொண்ட அமெரிக்க அணியை இளம் டென்னிஸ் நட்சத்திரமான காஃப் வழிநடத்துவார் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த அறிவிப்பினால் முழு அமெரிக்க டென்னிஸ் ஒலிம்பிக் குழுவும் மனம் உடைந்து விட்டதாக அமெரிக்க டென்னிஸ் சங்கம் ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

டோக்கியோவில் உள்ள விளையாட்டு வீரர்கள் கிராமத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான முதல் போட்டியாளர்களாக இரு தென்னாபிரிக்க கால்பந்து வீரர்கள் முன்னதாக பதிவானார்கள். அதன்படி தபிசோ மோனியானே மற்றும் கமோஹெலோ மஹ்லட்சி ஆகியோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தென்னாபிரிக்க கால்பந்து சங்கம் உறுதிபடுத்தியது.

அது மாத்திரமன்றி தென்னாபிரிக்கா கால்பந்து அணியின் வீடியோ ஆய்வாளர் மரியோ மாஷாவும் சனிக்கிழமையன்று நேர்மறையை சோதித்தார். இதனால் அந்த அணி தனிமைப்படுத்தலில் உள்ளது மேலும் சோதனை முடிவுகளும் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையில், ஜூலை 16 அன்று டோக்கியோவுக்கு வந்த பின் நேர்மறையை சோதித்த ஒரு நபரின் நெருங்கிய தொடர்புகளாக அடையாளம் காணப்பட்ட கிரேட் பிரிட்டன் தடகள அணியைச் சேர்ந்த ஆறு விளையாட்டு வீரர்கள் மற்றும் இரண்டு ஊழியர்கள் டோக்கியோவில் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மொத்தமாக ஞாயிற்றுக்கிழமை மாலை வரை டோக்கியோ ஒலிம்பிக்கில் ஊடகங்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் பிற பணியாளர்கள் உட்பட 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை 15 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad