குளிர்காலத்தில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா மாறுபாடு உருவாகும் - எச்சரிக்கை விடுத்தது பிரான்ஸ் அரசு - News View

About Us

About Us

Breaking

Sunday, July 25, 2021

குளிர்காலத்தில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா மாறுபாடு உருவாகும் - எச்சரிக்கை விடுத்தது பிரான்ஸ் அரசு

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. அந்த வைரசில் மரபணு மாற்றம் ஏற்பட்டு உருமாறியது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனாவுக்கு ஆல்பா என்றும் இந்தியாவில் உருமாறிய கொரோனாவுக்கு டெல்டா என்றும் பெயரிட்டுள்ளனர்.

உருமாறிய கொரோனா வைரசால் பல்வேறு நாடுகளில் மீண்டும் பாதிப்பு அதிகரித்தபடி இருக்கிறது. குறிப்பாக டெல்டா வகை வைரஸ் 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்டா வைரஸ் மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. பிரான்ஸ் நாட்டில் கொரோனா 4ஆவது அலை தாக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா மாறுபாடு இந்த ஆண்டு குளிர்காலத்தில் உருவாகும் என்று பிரான்ஸ் நிபுணர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரான்ஸ் நாட்டு அரசின் விஞ்ஞான கவுன்சிலின் தலைவர் ஜூன் பிரான்கோயிஸ் டெல்ப்ரைசி கூறியதாவது, டெல்டா வகை மாறுபாட்டால் நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு குளிர்காலத்தில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா மாறுபாடு உருவாக சாத்தியம் உள்ளது. அதன் விளைவுகளை இப்போது கணிக்க முடியாது. அல்லது அது மிகவும் ஆபத்தானதா? என்றும் தற்போது கூற முடியாது.

மக்கள் சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிவதை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். இயல்பு நிலைக்கு திரும்புவது 2022 அல்லது 2023ஆம் ஆண்டில் இருக்கலாம்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் நமக்கு இருக்கும் பெரிய சவால் என்ன வென்றால், தடுப்பூசி போடப்பட்ட நாடுகள் மற்றும் தடுப்பூசி போடப்படாத நாடுகள் என்று இரண்டு உலகங்களுடன் நாம் எவ்வாறு இணைந்திருக்க போகிறோம் என்பதுதான் என அவர் கூறினார்.

No comments:

Post a Comment