கல்முனை பிராந்தியத்தில் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள மக்கள் அலை மோதினர் : பற்றாக்குறையால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 25, 2021

கல்முனை பிராந்தியத்தில் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள மக்கள் அலை மோதினர் : பற்றாக்குறையால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருதில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று இரண்டாவது நாளாகவும் சுகாதார வைத்திய அதிகாரி அல்-அமீன் றிசாத் தலைமையில் வெற்றிகரமாக இடம்பெற்றது. 

நேற்று (24) சனிக்கிழமை 1162 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதுடன் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணி வரையில் 850 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி அல்-அமீன் றிசாத் தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச செயலக பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், உதவி பிரதேச செயலாளர் எஸ். பாத்தீபன், உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பட்டதாரி பயிலுனர்கள், பல்நோக்கு அபிவிருத்தி பயிற்சி உதவியாளர்கள் தடுப்பூசியை இன்று பெற்றுக் கொண்டதோடு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்திலும் இணைந்து கொண்டனர்.
மேலும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பிரிவில் நேற்று (24) சனிக்கிழமை மொத்தமாக 1930 பேர் தடுப்பூசிகள் பெற்றுக் கொண்டுள்ளனர். 

இன்று மாலை 04.00 மணி வரை 1800 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி தஸ்லிமா வஸீர் தெரிவித்தார். 

மேலும் கொரோனா தடுப்பூசி கிடைக்காமையினால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் சில இடங்களில் அதிகமானோர் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பிச் சென்றதையும் அவதானிக்க முடிந்தது.

கல்முனை பிராந்தியத்திற்கு சுகாதார அமைச்சினால் 50 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் முதல் நாளில் மட்டுமே 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment