(வத்துகாமம் நிருபர்)
எரிபொருன் விலை உயர்வு, வாழ்க்கைச் செலவு உயர்வு, பசளைக்கான தட்டுப்பாடு போன்ற பல விடயங்களை கண்டித்து பாத்ததும்பறைத் தொகுதி ஐக்கிய மக்கள் முன்னணியால் செவ்வாய்க்கிழமை மடவளையில் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மடவளை ஐினமங்களாராம விகாரை முன் ஆரம்பித்து மடவளை பிரதான சந்தி வரை ஊர்வலமாக வந்து மடவளை தெல்தெனிய சந்தியில் கோஷமிட்டு எதிர்பை வெளியிட்னர்.
அங்கு பாத்ததும்பறைத் தொகுதி ஐக்கிய மக்கள் முன்னணி பிரதான அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை அங்கத்தவருமான திலின பண்டார தென்னகோன் தெரிவித்தாவது,
நாட்டில் இன்று பேசப்பட வேண்டிய பிரச்சினைகள் எத்தனையோ இருக்க அவை அனைத்தயும் மறந்து விட்டு பாராளுமன்றத்திற்கு யாரை கொண்டு வந்து சேர்ப்பது என்ற விவாதத்திலே அரசு காலம் தள்ளுகிறது. பாராளுமன்றத்திற்கு பசில் தேவையா இல்லையா என்பதெல்லாம் பொதுமக்களது பிரச்சினையல்ல.
வாழ்க்கைச் செலவு மற்றும் வாழ்வாதாரப் போராட்டம், கொவிட் பரவல் தொடர்பான பிரச்சினை, மாணவர்களது கல்விப் பிரச்சினை இவைகளே இன்று மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகலாகும். அதனை விட்டுவிட்டு யாரை பாராளுமறத்திற்கு அழைப்பது என்பதை அரசு பிரதானப்படுத்தியுள்ளது. இது மக்களது பிரச்சினையல்ல.
எனவே மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியா விட்டால் ஒதுங்கி நின்று எனையவர்களுக்கு ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார். பின்னர் கூட்டம் அமைதியாகக் கலைந்து சென்றது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment