மியன்மாரின் கொந்தளிப்பான சூழல் மிகுந்த கவலை தருகிறது : அமெரிக்கா - News View

Breaking

Post Top Ad

Friday, July 16, 2021

மியன்மாரின் கொந்தளிப்பான சூழல் மிகுந்த கவலை தருகிறது : அமெரிக்கா

மியன்மாரில் நிலவும் கொந்தளிப்பான சூழல் மிகுந்த கவலையளிப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

மியன்மாரில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவந்து, மீண்டும் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken), ஆசியான் அமைப்பிடம் வலியுறுத்தினார்.

நியாயமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்போரை விடுதலை செய்யவும் அவர் கேட்டுக் கொண்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் கூறினார்.

மியன்மாருக்காக வகுக்கப்பட்ட 5 அம்சத் திட்டத்தைச் செயல்படுத்துமாறு பிளிங்கன் வலியுறுத்தியதாகவும் அவர் சொன்னார். 

பெப்பரவரியில், மியன்மார் இராணுவம் அங்கிருந்த அரசாங்கத்தைக் கவிழ்த்தது. முன்னைய அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad