காஷ்மீர் செல்லும் தொகுதி எல்லை மீள் நிர்ணய குழு : வெளிப்படைத் தன்மையை வலியுறுத்தும் கட்சிகள் - News View

Breaking

Post Top Ad

Thursday, July 8, 2021

காஷ்மீர் செல்லும் தொகுதி எல்லை மீள் நிர்ணய குழு : வெளிப்படைத் தன்மையை வலியுறுத்தும் கட்சிகள்

ஜம்மு - காஷ்மீர் தொகுதி எல்லைகளை மீள வகுக்கும் எல்லை நிர்ணய குழு காஷ்மீர் செல்லவுள்ளது. 

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் ஜம்மு - காஷ்மீர் பிராந்திய பிரதான கட்சிகளான தேசிய மாநாடு மற்றும் மக்கள் மாநாடு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவிருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் எல்லை நிர்ணய குழு கடந்த பெப்ரவரி 18ம் திகதி கூட்டிய கலந்தாய்வு மாநாட்டில் தேசிய மாநாட்டுக் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவில்லை. 

ஆனால் நடைபெறவுள்ள ஆலோசனை மாநாட்டில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர்களான பரூக் அப்துல்லாஹ், ஹஸ்நயின் மசூதி, அக்பர் லோனே ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கட்சியின் தலைவரான சஜாத் லோனேவிடம் இது தொடர்பாக கேட்கப்பட்ட போது, அழைப்பு விடுக்கப்படுமானால் குழுவை நாம் சந்திப்போம். என்று கூறியவர், இந்த மீள் நிர்ணயத்தை தவிர்க்க நாம் நினைக்கவில்லை. ஆனால் தொகுதி எல்லை நிர்ணயம் என்பது நியாயமாகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும். அது ஜம்மு காஷ்மீருக்காக மட்டுமென வரையறுக்கப்படவும் கூடாது என்றும் தெரிவித்தார்.

பகிஷ்கரிப்பு செய்யமாட்டோம் என்றும் பகிஷ்கரிப்பினால் கிடைத்த பலன் எதுவுமில்லை என்று குறிப்பிட்ட அவர் அது எதிர்த்தரப்பினருக்கு சாதகமாகி விடுகிறது என்றும் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் சட்ட சபைத் தலைவர் குலாம் அஹமட் இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு பதிலளிக்கையில், கடந்த ஜூன் 24ம் திகதி பிரதமருடன் நடைபெற்ற சகல கட்சிக் கூட்டத்தில் பா.ஜ.க. தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் சட்ட சபை கூட்டப்பட்ட பின்னரேயே எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததாகக் குறிப்பிட்டார்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கான எல்லை மீள் நிர்ணயம் 2021 கான குடிசன மதிப்பீட்டின் பிரகாரம் நடைபெறவிருக்கும் போது ஜம்மு காஷ்மீருக்கான மீள் நிர்ணயம் மட்டும் ஏன் 2011 குடிசன மதிப்பீட்டின் பிரகாரம் நடத்தப்பட வேண்டும் என தேசிய மாநாட்டு கட்சியின் பிரதிநிதி தலைவர் ஒமர் அபதுல்லாஹ் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad