இஸ்ரேலிய மென்பொருளைப் பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் தொலைபேசிகள் குறிவைப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, July 19, 2021

இஸ்ரேலிய மென்பொருளைப் பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் தொலைபேசிகள் குறிவைப்பு

இஸ்ரேலிய கண்காணிப்பு நிறுவனமான என்.எஸ்.ஓ குழுமத்தால் விற்கப்பட்ட மென்பொருளைப் பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

நிருபர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வணிக நிர்வாகிகள் மற்றும் கொலை செய்யப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் வருங்கால மனைவி ஆகியோருக்கு சொந்தமான டஜன் கணக்கான ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை ஹேக் செய்ய தனியார் இஸ்ரேலிய உளவு மென்பொருளான 'பெகாசஸ் ஸ்பைவேர்' பயன்படுத்தப்பட்டது என்று வொஷிங்டன் போஸ்ட் மற்றும் 16 பிற செய்தி நிறுவனங்கள் நடத்திய விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த அறிக்கைகளை என்.எஸ்.ஓ. குழுமம் மறுத்துள்ளதுடன், இது தொடர்பான அனைத்து நம்பகமான உரிமை கோரல்களையும் தொடர்ந்து விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளது.

பெகாசஸ் ஸ்பைவேர் என்பது ஓர் இஸ்ரேலிய நிறுவனமான என்.எஸ்.ஓ. குழுமத்தால் உருவாக்கப்பட்ட ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படுத்தப்படும் உளவு மென்பொருளாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad