கப்பல் நிறுவனத்திடமிருந்து மேலும் இழப்பீடு பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் : கடற்கரையை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் - அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன த சில்வா - News View

About Us

About Us

Breaking

Thursday, July 22, 2021

கப்பல் நிறுவனத்திடமிருந்து மேலும் இழப்பீடு பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் : கடற்கரையை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் - அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன த சில்வா

இலங்கை கடலில் எரிந்து மூழ்கிய ‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட இழப்பீடானது பாதிப்புக்கு உள்ளான மீன்பிடி சமூகத்திற்கு வழங்க போதுமான இல்லை என்பதால், மிகுதி இழப்பீட்டைப் பெற சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ, கடலோர பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி மொஹான் பிரியதர்ஷன த சில்வாவிடம் அறிவுறுத்தியுள்ளார்.

கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிட்ட கப்பல் நிறுவனத்திடமிருந்து 20 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீட்டைக் கோரியுள்ளது. ஆனாலும் கப்பல் நிறுவனம் 3.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை மட்டுமே செலுத்தியுள்ளது.

அந்தத் தொகையில் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 மில்லியன் அமெரிக்க டொலர் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கப்பல் சம்பவம் காரணமாக ஏற்பட்ட செலவுகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.

சட்ட நடைமுறைகளை விரைவுபடுத்தவும், மீதமுள்ள இழப்பீட்டைப் பெற்று மீன்பிடித் தொழிலாளர்களிடம் வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

பத்தரமுல்லை செத்சிறிபாய இரண்டாம் கட்டத்தின் 12 ஆம் மாடியில் உள்ள கடலோர பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட போதே இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷனா டி சில்வா இந்த விடயங்களைக் கூறினார்.

அங்கு நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடங்கிய விடயங்களை நிறைவேற்ற முடியுமெனத் தெரிவித்தார். 

'மீன்பிடி சமூகத்திற்கு பல பிரச்சினைகள் உள்ளன. கப்பல் தீவிபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 20 மில்லியன் டொலர் இழப்பீடு கோரப்பட்டது. ஆனால் எங்களுக்கு 3.6 மில்லியன் இழப்பீடு மட்டுமே கிடைத்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க அந்தத் தொகை போதாது. 3.6 மில்லியன் அமெரிக்க டொலர்களில், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.

ஏற்கனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் காஞ்சனா விஜேசேகர மற்றும் இராஜாங்க நாலக்க கொடஹேவா இது தொடர்பாக போதுமான நடவடிக்கை எடுத்துள்ளனர். நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டோம். அந்த பாதிப்பானது மீன்பிடி சமூகத்திற்கும் நமது சுற்றுச்சூழல் அமைப்பிற்கும் ஏற்பட்டது. நாங்கள் கோரிய இழப்பீட்டைப் பெற முயற்சிக்கிறோம். அந்த பணத்தை கப்பல் நிறுவனத்திடமிருந்து பெற்று நம் நாட்டிற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கொடுக்க நடவடிக்கை எடுப்போம். 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில் இது குறித்து விவாதித்தார். அதிகபட்ச இழப்பீட்டை நாம் பெற வேண்டும் என்று அவர் தெளிவான வழிமுறைகளை வழங்கினார். பெறப்பட்ட இழப்பீட்டை மீன்பிடி சமூகத்திற்கு செலுத்த வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். 

நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி ஏற்கனவே சட்ட நிபந்தனைகளின் கீழ் இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து தொடர்புகளையும் மேற்கொண்டு வருகிறார்.

கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். நான் பிரதிநிதித்துவப்படுத்தும் காலி மாவட்டத்தில் சுமார் 18 கி.மீ கடற்கரை அரிக்கப்பட்டுள்ளது. மேலும், கஹாவா கடற்கரை மற்றும் நிலத்தின் அரிப்பு காரணமாக காலி-கொழும்பு பிரதான வீதி கடுமையாக சேதமடைந்துள்ளது. 

கடற்கரையை பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் 'என கடலோர பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி அமைச்சர் மோகன் பிரியதர்ஷன டி சில்வா தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கு அமைச்சர் ரமேஷ் பத்திரண, இராஜாங்க அமைச்சர்களான சஷீந்திர ராஜபக்ஷ, கலாநிதி நாலக்க கொடஹேவா, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிரினிமல் பெரேரா, இராஜாங்க அமைச்சரின் செயலாளர் எல்.எல்.ஏ.விஜேசிரி, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் உதய நாணயக்கார, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி தர்சனி லஹந்தபுர, கடல்வள பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.எஸ்.ரணவக்க உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment