வக்பு சபையின் கீழ் மக்தப்கள் : உலமா சபையுடன் உடன்படிக்கை - News View

Breaking

Post Top Ad

Saturday, July 10, 2021

வக்பு சபையின் கீழ் மக்தப்கள் : உலமா சபையுடன் உடன்படிக்கை

நாடெங்கும் இயங்கி வரும் மக்­தப்கள் வக்பு சபையின் கீழ் கொண்டு வரப்­ப­ட­வுள்­ளன. இதற்­கென அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையும் வக்பு சபையும் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­மொன்றில் கைச்சாத்தி­டு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ளன.

ஸூம் செய­லி­யி­னூ­டாக இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போது குறிப்­பிட்ட புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையின் நகல் தொடர்பில் உடன்­பாடு எட்­டப்­பட்­டது.

ஸூம் கலந்­து­ரை­யா­டலில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர், பொதுச் செய­லாளர், பிர­தம நிர்­வாக அதி­காரி உட்­பட பல உல­மாக்கள் கலந்து கொண்­டனர். 

வக்பு சபை தலைவர், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லுல்கள் திணைக்களத்தின் பணிப்­பாளர் உதவிப் பணிப்­பாளர் உட்­பட பல உத்­தி­யோ­கத்­தர்­களும் கலந்து கொண்­டனர்.

குர்ஆன் மத்­ர­ஸாக்கள் இஸ்­லா­மிய சின்­னங்­களில் ஒன்­றாகும். முஸ்லிம் சிறார்­க­ளுக்கு அல்குர் ஆனை ஓதக்­ கற்­றுக் ­கொ­டுத்து சிறு வ­யது முதல் அற­நெறி பயிற்­சி­களை வழங்கி அவர்கள் நல்லொழுக்கமுள்­ள­வர்­க­ளா­கவும் நற்­பி­ர­ஜை­க­ளா­கவும் உருவாக்குவ­தற்­கான அடிப்­படை வழி­காட்­டல்கள் குர்ஆன் மத்ரஸாக்­களில் வழங்­கப்­ப­டு­கின்­றன. 

ஒவ்­வொரு முஸ்­லிமும் நாளாந்தம் குர்­ஆனை ஓதி ஐவேளை தொழுதாக வேண்டும். நபி (ஸல்) காலம் முதல் வர­லாறு முழு­வ­திலும் உலக வாழ் முஸ்­லிம்கள் முஸ்லிம் சிறார்­க­ளுக்கு குர்ஆன் மத்ரஸாக்களை உரு­வாக்கி அதனைப் பேணி பாது­காத்து வரு­வதை மிகப்­பெரும் வணக்­க­மாகக் கருதி செய்து வரு­கின்­றனர்.

இலங்­கை­யிலும் முன்­னோர்கள் இதனைக் கட்டி வளர்த்து பாது­காத்து வந்­துள்­ளனர். கலா­நிதி நுஃமானின் ஆய்­வின்­படி 1800 களில் 5000 க்கும் மேற்­பட்ட மத்­ர­ஸாக்கள் இயங்கி வந்­துள்­ளன.

எனினும் காலப்­போக்கில் பள்­ளி­வா­சல்கள் அக்­கறை செலுத்­தா­ததன் கார­ண­மாக சிறார்கள் அற­நெறி வாழ்வில் சிறந்து விளங்­க­ வேண்டும் என்­ப­தற்­காக அகில இலங்கை ஐம்இய்­யத்துல் உலமா சபை 2011 முதல் குர்ஆன் மத்­ரஸா புன­ர­மைப்­புத் ­திட்­டத்தை ஆரம்­பித்து ‘மக்தப்’ என்ற பெயரில் நடாத்தி வரு­கின்­றது. மக்­தப்பில் 1200 க்கும் மேற்­பட்ட மஸ்­ஜித்கள் ஊடாக 110,000 சிறார்கள் பயில்­கின்­றனர்.

இந்­நி­லையில் பன்­முக சமூ­கங்கள் வாழும் இலங்­கையில் சிறந்த தலை­மு­றை­யி­னரைக் கட்­டி­யெ­ழுப்ப சிறார்­க­ளுக்­கான இஸ்­லா­மிய அற­நெ­றிப் ­பா­ட­சா­லைகள் எனும் திட்­டத்தை வக்­பு­சபை முன்வைத்துள்­ளது. 

இதனை கவ­னத்திற் கொண்டே உலமா சபை மக்தப் புனரமைப்புத்திட்­டத்தை கைவிட்டு, மக்தப் புன­ர­மைப்­புத்­திட்­டத்தில் பயன்­ பெற்று வரும் சிறார்கள் அனை­வ­ரையும் வக்பு சபையின் ‘இஸ்லா­மிய அற­நெ­றிப் ­பா­ட­சா­லைகள்’ திட்­டத்தில் முழு­மை­யாக உள்­வாங்­கு­வதை கவ­னத்­திற்­கொண்­டுள்­ளது.

2020 மார்ச் மாதம் முதல் அதன் சாதக பாத­கங்கள் தொடர்பில் வக்பு சபையும் உலமா சபையும் பல்­வேறு கலந்­து­ரை­யா­டல்­களை நடத்தின. 

இறு­தியில் இரு ­த­ரப்பும் தங்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்வு ஒப்பந்தமொன்­றினைச் செய்து அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்துச் செல்­வ­தா­கவும் புரிந்­து­ணர்வு ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள் பேணப்படும் காலமெல்லாம் உலமா சபை, வக்பு சபையின் அறநெறிப் பாடசாலைத் திட்டத்துக்கு தனது பூரண ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரிவித்தார்.

Vidivelli

No comments:

Post a Comment

Post Bottom Ad