அரச ஊழியர்கள் அனைவரையும் சேவைக்கு அழைப்பதானது கொவிட் பரவல் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும் : வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 31, 2021

அரச ஊழியர்கள் அனைவரையும் சேவைக்கு அழைப்பதானது கொவிட் பரவல் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும் : வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்

(எம்.மனோசித்ரா)

அரச ஊழியர்கள் அனைவரையும் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் சேவைக்கு அழைப்பதானது கொவிட் பரவல் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும். எவ்வாறிருப்பினும் நாம் அனைவரும் எந்தளவிற்கு சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுகின்றோம் என்பதிலேயே அது தங்கியுள்ளது என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், சகல அரச ஊழியர்களையும் சேவைக்கு அழைத்திருப்பதானது சில சந்தர்ப்பத்தில் கொவிட் பரவல் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும். எவ்வாறிருப்பினும் நாம் அனைவரும் எந்தளவிற்கு சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுகின்றோம் என்பதிலேயே அது தங்கியுள்ளது.

எனவே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் எனில் கொவிட் வைரஸ் பரவலுக்கு எதிராக போராட்டத்துடன் பொருளாதாரத்துடன் தொடர்புடைய செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது அத்தியாவசியமானதாகும்.

எனவே தேவையான சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி இதனை தொடர்ந்தும் பேண முடியுமாயின் பாரதூரமாயின் நிலைமை இன்றி கொவிட் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முடியும் என்றார்.

No comments:

Post a Comment