நாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை அரசாங்கமே நேரடியாக இறக்குமதி செய்யும் : அமைச்சர் பந்துல குணவர்த்தன - News View

About Us

About Us

Breaking

Sunday, July 25, 2021

நாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை அரசாங்கமே நேரடியாக இறக்குமதி செய்யும் : அமைச்சர் பந்துல குணவர்த்தன

நாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை அரசாங்கம் அரச நிறுவனம் ஒன்றினூடாக நேரடியாக இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதுவரை தனியார்துறை வர்த்தகர்கள் மூலமே பெருமளவு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதையடுத்து தற்போது அரசாங்கம் நேரடியாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வர்த்தக அமைச்சர், சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் இத்தருணத்தில் தனியார் துறை வர்த்தகர்களின் ஏகாதிபத்தியத்தை மட்டுப்படுத்தும் வகையிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அரச வணிக கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தை மீள பலப்படுத்தி அந்த நிறுவனத்தின் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment