அவுஸ்திரேலிய தடகள அணி உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

Breaking

Thursday, July 29, 2021

அவுஸ்திரேலிய தடகள அணி உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கெடுத்துள்ள அவுஸ்திரேலிய தடகள அணியின் உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக கொரோனா தொற்றுக்கு சாதகமாக பரிசோதனை மேற்கொண்ட அமெரிக்காவின் உயரம் பாய்தல் வீரர் சாம் கென்ட்ரிக்ஸுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதன் காரணத்தினலேயே அவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அவுஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி ஒரு அறிக்கையில், விளையாட்டு வீரர்கள் தங்கள் அறைகளில் "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக" தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கூறியுள்ளது.

இதனிடையே உலக சாம்பியனான கென்ட்ரிக்ஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment