கொக்கெய்ன் பயன்படுத்திய குற்றச்சாட்டில் 4 ஒலிம்பிக் பணியாளர்கள் கைது - News View

Breaking

Wednesday, July 14, 2021

கொக்கெய்ன் பயன்படுத்திய குற்றச்சாட்டில் 4 ஒலிம்பிக் பணியாளர்கள் கைது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி பணிகளுக்காக ஜப்பானுக்கு சென்ற அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த நான்கு எலக்ட்ரீஷியன்கள் கொக்கெய்ன் பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு பிரிட்டன் மற்றும் இரண்டு அமெரிக்கர்கள் ஜூலை 3 முதல் 5 ஆகிய தினங்களில் கைது செய்யப்பட்டதாக ஜப்பான் பொலிஸார் செவ்வாயன்று தெரிவித்தனர்.

எனினும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளனர்.

டோக்கியோ விளையாட்டுக்களுக்கான இடங்களில் பயன்படுத்தப்படும் மின்சார ஜெனரேட்டர்களுக்கான பராமரிப்புப் பணிகளில் பங்கேற்க கடந்த பெப்ரவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில் இந்த நான்கு பேரும் ஜப்பானுக்கு சென்றுள்ளனர்.

14 நாள் தனிமைப்படுத்தலை முடித்த பின்னர் தங்கள் பணிகளை அவர்கள் ஆரம்பித்திருந்தனர்.

No comments:

Post a Comment