செப்டம்பரில் கொரோனா 4ஆம் அலை ஏற்படும் வாய்ப்பு - அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ள அறிவியல் ஆலோசகர் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 3, 2021

செப்டம்பரில் கொரோனா 4ஆம் அலை ஏற்படும் வாய்ப்பு - அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ள அறிவியல் ஆலோசகர்

பிரான்சில் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்தில் 4ஆவது அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவியல் ஆலோசகரும், பேராசிரியருமான ஜீயன் பிரான்சிஸ் டெல்பிரைசி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 4ஆம் அலையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றும், தடுப்பூசி போடுவதை தீவிரபடுத்த வேண்டும் என்றும் அறிவியல் ஆலோசகர் கூறியுள்ளார்.

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா புதுப்புது அவதாரம் எடுத்து மக்களை வேட்டையாடி வருகிறது. பிரான்சில் ஏற்கனவே 3 அலைகளாக உருமாறி காவு வாங்கிய கொரோனா, வரும் செப்டம்பர் மாதத்தில் 4ஆம் அலையாக உருவெடுக்கும் என்று அறிவியல் ஆலோசகர் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரான்சில் கடந்த சில நாட்களாக டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது 4ஆவது அலைக்கு வித்திடும். செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்தில் 4ஆவது அலையின் வீரியம் அதிகமாக இருக்கும் என அரசின் அறிவியல் ஆலோசகரும், பேராசிரியருமான ஜீயன் பிரான்சிஸ் டெல்பிரைசி தெரிவித்துள்ளார்.

இருப்பினும் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றும், தடுப்பூசி போடுவதை தீவிரபடுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment