ஓட்டமாவடியில் இன்று மாலை வரை 1001 கொவிட் ஜனாசாக்கள் அடக்கம் - News View

Breaking

Wednesday, July 14, 2021

ஓட்டமாவடியில் இன்று மாலை வரை 1001 கொவிட் ஜனாசாக்கள் அடக்கம்

ஓட்டமாவடியில் இன்று (14) மாலை வரை 1001 கொவிட் ஜனாசாக்கள் அடக்கம் செய்யும் பணி நிறைவடைந்துள்ளது.

இதில் 946 முஸ்லிம்கள், 24 இந்துக்கள், 16 கிறிஸ்தவர்கள் மற்றும் 15 பௌத்தர்கள் என அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அடக்கம் செய்யப்படுவதற்கு முந்திய 333 நாட்களிலே வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டவர்களுக்காகவும், அவர்களது குடும்ப உறவுகளுக்குமாக உள்ளது.

மண்ணில் இருந்து படைக்கப்பட்ட நாம் அந்த மண்ணுக்குள்ளேயே திரும்புவோம்.

இவ்வாறு தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான செய்யித் அலிசாஹிர் மௌலானா 

No comments:

Post a Comment