யாழ்ப்பாணம் - சுழிபுரத்தில் மோட்டார் செல் கண்டெடுபிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, June 18, 2021

யாழ்ப்பாணம் - சுழிபுரத்தில் மோட்டார் செல் கண்டெடுபிப்பு

யாழ்ப்பாணம் - சுழிபுரம், வறுத்தோலையில் மோட்டார் செல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று (வியாழக்கிழமை) சுழிபுரம், வறுத்தோலையிலுள்ள வெற்றுக் காணி ஒன்று, ஜே.சி.பி இயந்திரம் ஊடாக துப்பரவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களினால் வெடிகுண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது.

அதன் பின்னர் ஜே.சி.பி இயக்குநர், காணி உரிமையாளருக்கு சம்பவம் தொடர்பாக தகவல் வழங்கியமையை தொடர்ந்து அவர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தினார்.

இந்நிலையில் வெடிகுண்டினை மீட்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கிய பின்னரே அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment