வீடுகளில் முடங்கியுள்ள சிறுவர்கள், பெரியவர்களுக்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 15, 2021

வீடுகளில் முடங்கியுள்ள சிறுவர்கள், பெரியவர்களுக்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அழைப்பு

எம்.எம்.சில்வெஸ்டர்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் சிறுவர்கள் வீடுகளில் முடங்கிக்கிடக்கின்றனர். அதுபோல், தற்போது பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சிறுவர்களைப் போலவே பெரியோர்களும் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் இரண்டு தரப்பினரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

இதனை தவிர்த்துக் கொள்ளும் விதமாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் 'கற்பனைச் சித்திரம் 2021' எனும் சித்திரம், சுவரொட்டிகள் அல்லது கேலிச் சித்திரம் போட்டியொன்றை அகில இலங்கை ரீதியாக ஏற்பாடு செய்துள்ளது.

சிறுவர்களது பாதுகாப்பு குறித்து சிறுவர்கள் மற்றும் பெரியோர்களும் சிறந்த அவதானத்தை பெற வேண்டும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை எதிர்பார்த்து நிற்கிறது.

சித்திரப் போட்டி, சுவரொட்டிகள் அல்லது கேலிச்சித்திரம் ஆகியவற்றின் கீழ் நடத்தப்படும். இந்த 'கற்பனைச் சித்திரம் 2021' ஆனது பாடசாலை மாணவர்கள் தரப்பு, திறந்த தரப்பு ஆகிய இரண்டு பிரதான பாகங்களின் கீழ் நடத்தப்படுகிறது.

பாடசாலை தரப்பின் கீழ் 5 பிரிவுகளிலும், திறந்த தரப்பின் கீழ் 2 பிரிவுகளிலுமாக போட்டி நடத்தப்படுகிறது. உங்கள் சித்திர ஆக்கங்களை பெஸ்டல், நீர் வர்ணச் சாயம் உள்ளிட்ட ஏதேனும் வர்ணப் பூச்சுக்களைக் கொண்டு A4 தாளில் வரைந்து அனுப்பவும்.

உங்கள் சுய விபரக் கோவையுடன், உங்கள் ஆக்கங்களை இடது பக்க மேல் மூலையில் 'கற்பனைச் சித்திரம் 2021' என குறிப்பிட்டு, தலைவர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, இலக்கம் 330, தலவத்துகொட வீதி, மாதிவெல, ஸ்ரீ ஜயவர்தனபுர எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கலாம் அல்லது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அலுவலகத்துக்கு நேரடியாக வந்து கையளிக்கலாம். உங்களது ஆக்கங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி 2021.08.31 ஆகும்.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதுடன், அதிகார சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் விரைவில் பதிவேற்றப்படவுள்ளது. 

இதன் மேலதிக விபரங்கள் பத்திரிகைகளில் இன்னும் சில தினங்களில் பிரசுரமாகும். மேலதிக விபரங்களை 0715789775, 0769905295 (பாடசாலை பிரிவு), 0711787999 (திறந்த பிரிவு) ஆகிய தொலைபேசி இலக்கங்களை அழைக்கவும்.

No comments:

Post a Comment