கரும்புத் தோட்டக் காணியில் விவசாயம் : விரும்புவோருக்கு மணல் அனுமதி - அமைச்சர் டக்ளஸ் தலைமையில் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Friday, June 18, 2021

கரும்புத் தோட்டக் காணியில் விவசாயம் : விரும்புவோருக்கு மணல் அனுமதி - அமைச்சர் டக்ளஸ் தலைமையில் தீர்மானம்

கிளிநொச்சி, அக்கராயன் பிரதேசத்தில் அமைந்துள்ள கரும்புத் தோட்டக் காணியில் உடனடியாக விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மணல் அகழ்வதற்கான அனுமதிகளை வழங்குவதன் மூலம் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், மாவட்ட செயலகத்தில் இன்று (18) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்றது.

கரும்பு தோட்டமாக அடையாளப்படுத்தப்படுகின்ற சுமார் 196 ஏக்கர் விஸ்தீரனமான நிலப்பரப்பு, நீண்ட காலமாக சரியான பராமரிப்பு இன்றி காணப்படுகின்றது.

குறித்த காணியில் பயிர் செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கு அந்தப் பிரதேசத்தினை சேர்ந்த சமூக அமைப்புக்கள் ஆர்வம் வெளியிட்டிருந்தன. இந்நிலையில், இன்றைய கூடடத்தில் அது தொடர்பாக ஆராயந்து தீரமானம் மேற்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில், குறித்த காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புகின்றவர்கள் தேவையான அனுமதிகளைப் பெற்று உடனடியாக சிறுபோக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பிரதேசத்தில் முழுமையாக கரும்புத் தோட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கின்ற போதிலும், உடனடியாக அதனை நடைமுறைப்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கும்.

எனவே, உப உணவுப் பயிர் செய்கையை மேற்கொள்வதுடன் படிப்படியாக கரும்புப் செய்கை அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, மாவட்டத்தில் மணல் அகழ்வதற்கு பொருத்தமான இடங்களை தெரிவு செய்து, தேவையானளவு அனுமதிகளை விரும்புகின்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியும் என்ற அடிப்படையில், ஒரு வார காலப் பகுதிக்குள் குறித்த அனுமதிகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment