ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவாக செயற்பட்ட கேகாலை நகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பானது, தமது கட்சிக்கு எதிராக செயற்படும் அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்திருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை நகர சபை உறுப்பினரான லக்ஷ்மன் திஸாநாயக்க ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தமையின் காரணமாக அவருக்கெதிராக ஒழுக்காற்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டது. அதன் பிரகாரம் அவரைக் கட்சியிலிருந்து விலக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதனையடுத்து இத்தீர்மானத்திற்கு எதிராக அவர் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவ்வழக்கு தொடர்பில் வெளியாகியுள்ள தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
அதன்படி இந்த வழக்கிற்காக செலவான தொகையை அவர் ஐக்கிய தேசியக் கட்சிக்குச் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள விரும்பும் அனைவரும் இதனைக் கருத்திற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment