கொறோனா தடுப்பூசி வேலைத்திட்டம் தொடர்பில் மதகுருமார் மகிழ்ச்சி - அமைச்சர் டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 2, 2021

கொறோனா தடுப்பூசி வேலைத்திட்டம் தொடர்பில் மதகுருமார் மகிழ்ச்சி - அமைச்சர் டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்பு

யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கொரோனா தடுப்பூசியேற்றும் வேலைத் திட்டத்தில், மதகுருமாருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவித்துள்ள மதகுருமார், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சுகாதார தரப்பினருக்கும் நன்றிகளையும் ஆசிகளையும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அனைவரும் எந்தவிதமான சந்தேகங்களும் இன்றி, ஆர்வமுடன் முன்வந்து கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதன் மூலம், எம்மையும் பாதுகாத்து, எமது நாட்டில் இருந்து கொறோனாவை வெளியேற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மதகுருமாரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தில் அனைத்து மதங்களின் குருமாருக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை பௌத்த சாசன மத விவகார அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்து மத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ இராமச்சந்திரக் குருக்கள் பாபு சர்மா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment