தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலவத்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து சுமார் 30 மில்லியன் ரூபா பெறுமதியுடைய பொருட்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து இவர்கள் கொழும்பு தெற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து அமெரிக்க டொலர்களும், மலேசிய நாணயத் தாள்களும், தங்க நகைகளும், மூன்று கையடக்கத் தொலைபேசிகளும், ஹெரோயின் போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யபட்டு, கிருலப்பனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கைதான சந்தேக நபர்கள் கிருலப்பனை மற்றும் நாரஹேன்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த 38, 43 மற்றும் 44 வயதுடையவர்கள் என்றும் அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை சந்தேக நபர்களை இன்றையதினம் புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment