எத்தியோப்பியாவில் 3 இலட்சத்தி 50 ஆயிரம் மக்கள் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ளனர் - ஐ.நா. - News View

About Us

About Us

Breaking

Friday, June 11, 2021

எத்தியோப்பியாவில் 3 இலட்சத்தி 50 ஆயிரம் மக்கள் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ளனர் - ஐ.நா.

எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் சுமார் 3 இலட்சத்தி 50 ஆயிரம் மக்கள் பேரழிவு தரும் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் முகவர்கள் மற்றும் உதவி குழுக்களின் பகுப்பாய்வு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

"டைக்ரேயில் இப்போது பஞ்சம் உள்ளது" என்று ஐ.நா. உதவித் தலைவர் மார்க் லோகாக் வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்ட பின்னர் கூறினார்.

வடக்கு எத்தியோப்பியாவில் உள்ள டைக்ரே பிராந்தியம், நவம்பர் முதல் மோதலில் மூழ்கியுள்ளது. இராணுவத் தளத்தின் மீது பிராந்திய போரிளிகள் நடத்திய தாக்குதலுக்கு எதிராக கூட்டாட்சி படைகள் பதிலடி கொடுத்தன.

ஏழு மாதங்களுக்குப் பிறகு பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்பகுதியிலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த வார இறுதியில் ஏழு நாடுகளின் ஜி 7 உச்சி மாநாட்டில் எத்தியோப்பியா நிகழ்ச்சி நிரல் குறித்து கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment