தடுப்பூசி பெற மறுத்த 178 ஊழியர்களை இடை நிறுத்தம் செய்த மருத்துவமனை - News View

Breaking

Post Top Ad

Friday, June 11, 2021

தடுப்பூசி பெற மறுத்த 178 ஊழியர்களை இடை நிறுத்தம் செய்த மருத்துவமனை

இந்த வாரத்திற்குள் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற கட்டளை இருந்தபோதிலும், கொவிட்-19 தடுப்பூசி பெற மறுத்த 178 ஊழியர்களை டெக்சாஸ் மருத்துவமனை இடை நிறுத்தம் செய்துள்ளது.

எட்டு மருத்துவமனைகளை மேற்பார்வையிடும் மற்றும் 26,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட ஹூஸ்டன் மெதடிஸ்ட் மருத்துவமனை ஊழியர்களுக்கே இந்த இடை நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி 178 முழுநேர அல்லது பகுதிநேர ஊழியர்களும் கட்டளைக்கு இணங்காததால் 14 நாட்கள் ஊதியம் இன்றி இடை நிறுத்தம் செய்யப்பட்டதாக மருத்துவமனை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இடை நிறுத்தம் செய்யப்பட்டவர்கள் இரண்டு வார காலத்திற்குள் தடுப்பூசி போடாவிட்டால், அவர்கள் சேவையிலிருந்து நிறுத்தப்படுவார்கள் என்று மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் சர்வசே ஊடகங்களிடம் உறுதிபடுத்தியுள்ளார்.

ஹூஸ்டன் மெதடிஸ்ட் வைத்தியசாலையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் மார்க் பூம் ஒரு அறிக்கையில், பெரும்பாலான மருத்துவமனை ஊழியர்கள் கட்டளைக்கு இணங்குவதாகவும், 24,947 பேருக்கு முழுமையாக தடுப்பூசி இதுவரை போடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad