(எம்.எப்.எம்.பஸீர்)
ஷங்ரில்லா ஹோட்டலில் நடந்த சந்திமல் ஜயசிங்கவின் பிறந்தநாள் களியாட்டத்தில் பங்கேற்றதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள மொடல் அழகி பியூமி ஹன்சமாலி, அழகுக் கலை நிபுணர் சந்திமல் ஜயசிங்க உள்ளிட்ட 15 பேரும் தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கோட்டை பொலிசார், பொது சுகாதார பரிசோதகரின் தலையீட்டுடன் அவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
குறித்த 15 பேரும் பண்டாரவளை பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் மையம் ஒன்றுக்கே அழைத்து செல்வதாக கூறப்படுகின்றது.
தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக பாதுகாப்புத் தரப்பினர் தமக்கு அனுமதிக்கவில்லை என, தனிமைப்படுத்தலுக்கு அழைத்து செல்லும் போது முகப்புத்தக நேரலை ஊடாக பியூமி ஹன்சமாலி குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment