1300 சிம் அட்டைகளை கடத்திய சீனர் : பதுங்கியிருந்த நிலையில் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, June 13, 2021

1300 சிம் அட்டைகளை கடத்திய சீனர் : பதுங்கியிருந்த நிலையில் கைது

கொல்கத்தாவிற்கு வடக்கே 500 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மால்டா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை வழியாக பதுங்கியிருந்த நிலையில் சீன பிரஜையொருவர் கைது செய்யப்பட்டார்.

கையடக்க தொலைப்பேசிகளுக்கு பயன்படுத்தப்படும் சுமார் 1300 சிம் அட்டைகளை சீனாவிற்கு கடந்த இரு ஆண்டுகளாக அனுப்பியதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.

சிம் அட்டை கணக்குகள் ஹேக் செய்தல் மற்றும் பிற வகையான நிதி மோசடி உள்ளிட்ட குற்றச் செயல்களுக்கு 1300 சிம் அட்டைகள் பயன்டுபத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள், சந்தேக நபரின் வாக்கு மூலத்தையும் பெற்றுள்ளனர்.

இந்தளவு பெரும் தொகையான சிம் அட்டைகளை அவர் எவ்வாறு கொள்வனவு செய்தார் என்பது தெரியவில்லை எனவும், உள்ளாடைகளில் மறைத்த நிலையிலேயே கடத்தியுள்ளதாக பாதுகாப்பு துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எவ்வாறாயினும் இந்திய பாதுகாப்பு துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment