தெற்கு சூடானில் இடம்பெற்ற இனவாத மோதல்களில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
தெற்கு சூடான் நாட்டில் லேக்ஸ் மாகாணத்தில் வசித்து வரும் கோனி மற்றும் தெயீத் என்ற இரு இனக்குழுக்கள் இடையே பல ஆண்டுகளாக மோதல் நடந்து வருகிறது.
அவர்கள் கால்நடைகளை வேட்டையாடுதல், பழிவாங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக உள்ளூர்வாசிகள் சட்டவிரோத வகையில் துப்பாக்கிகளை ஆயுதங்களாக பயன்படுத்தி வருகின்றனர்.
அவற்றை கட்டுப்படுத்த அரசு எடுத்த முயற்சி அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இந்நிலையில், ரும்பெக் ஈஸ்ட் என்ற பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் இரு தரப்பிலும் 13 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து பொலிஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment