விக்டோரியா நீர்த் தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் 10 நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 22, 2021

விக்டோரியா நீர்த் தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் 10 நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை

விக்டோரியா நீர்த் தேக்கத்தை அண்மித்த பகுதியில் 10 புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த கண்காணிப்பு கருவிகளை ஜெர்மனியிலிருந்து பெற்றுக் கொள்ளவுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல குறிப்பிட்டார்.

நில அதிர்வு கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டதன் பின்னர் விக்டோரியா நீர்த் தேக்கத்தை அண்மித்து ஏற்படக்கூடிய அதிர்வுகளை முன்னரைவிட சிறப்பான முறையில் கண்காணிக்க முடியும் என புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது காணப்படுகின்ற நிலைமையின் பிரகாரம் நில அதிர்வுகளுக்கான அளவை துல்லியமாக கணிக்க முடியாத நிலையுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹாகனதராவ, பல்லெகல, புத்தங்கல மற்றும் ஹக்மன ஆகிய பகுதிகளில் நில அதிர்வு கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

கடந்த நாட்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் நில அதிர்வு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment