மயானத்தில் புதைக்கப்படும் சடலங்களின் ஆடைகளை திருடி விற்ற கும்பல் : இந்தியாவில் நடந்தேறிய கொடூரம் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 13, 2021

மயானத்தில் புதைக்கப்படும் சடலங்களின் ஆடைகளை திருடி விற்ற கும்பல் : இந்தியாவில் நடந்தேறிய கொடூரம்

இந்தியாவில் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த உடல்களை தோண்டி எடுத்து அதன், ஆடைகளை திருடி விற்ற சந்தேகநபர்கள் 7 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த உடல்களை தோண்டி எடுத்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இறந்த சடலங்களை புதைத்த பின்னர் இவர்கள் அவ்விடத்திற்கு சென்று அவற்றைத் தோண்டி எடுத்து அவற்றுக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் ஆடைகளை திருடி, குறித்த ஆடைகளை சுத்தம் செய்து புதிய ஆடைகள் போல் மாற்றி புகழ்பெற்ற ஆடை நிறுவனங்களின் முத்திரைகளை பதித்து விற்பனை செய்து வந்துள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்படும் போது அவர்களிடமிருந்து 520 போர்வைகள், 140 சட்டைகள், 127 குர்தாக்கள், 52 சேலைகள், 112 வர்த்தக முத்திரை ஸ்டிக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டமையும் குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment