நடிகர்களான சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபா நன்கொடை - News View

About Us

About Us

Breaking

Thursday, May 13, 2021

நடிகர்களான சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபா நன்கொடை

சிரேஷ்ட தென்னிந்திய நடிகர் சிவகுமார் தனது இரண்டு மகன்களான சூர்யா மற்றும் கார்த்தியுடன் இணைந்து தமிழக முதல்வரின் கொவிட்-19 நிவாரண நிதிக்கு ஒரு கோடி இந்திய ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

அண்மையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு முதல்வரின் நிவாரண நிதிக்கு முடிந்தவரை பங்களிக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் நேற்று சிவகுமார் தனது மகன்களான சூர்யா மற்றும் கார்த்தியுடன் ஸ்டாலினை முதல்வர் அலுவலகத்தில் சந்தித்து இந்த நன்கொடையை வழங்கியுள்ளனர்.

கொவிட்-19 இலிருந்து மக்களைப் பாதுகாப்பதே காலத்தின் தேவை, நாங்கள் எங்கள் தரப்பிலிருந்து ஒரு சிறிய தொகையை வழங்கியுள்ளோம். எல்லோரும் தங்கள் சொந்த முயற்சியைச் செய்ய முன்வர வேண்டும் என்று நன்கொடையை அளித்த பின்னர் சிவகுமார் ஊடகங்கள் முன்னிலையில் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment