எமது முயற்சி தொடரும்; கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தொடர்பில் வியாழேந்திரன் மீண்டும் பேச்சு! - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 5, 2021

எமது முயற்சி தொடரும்; கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தொடர்பில் வியாழேந்திரன் மீண்டும் பேச்சு!

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தலின் எமது பணி முயற்சி தொடரும் எனவும் இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் சமல் ராஜபக்‌ஷவுடன் கடந்த 3ஆம் திகதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டிய நியாயத்தை எடுத்து கூறியுள்ளதுடன், தேவையான ஆவணங்களையும் எழுத்து மூலம் சமர்ப்பித்துள்ளேன். 

கடந்த காலம் முதல் பல முன்னெடுப்புக்களை பல விமர்சனங்களை தாண்டி நாம் முன்னெடுத்து வந்துள்ளோம்.

முதன் முதலில் மட்டக்களப்பில் பல ஜனநாயக மயப்படுத்தப்பட்ட போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் நாம். பாராளுமன்றத்தில் உள்ளேயும், வெளியேயும் பல முயற்சிகளை மேற்கொண்டோம்.

அதன்படி தொடர்ந்தும் அமைச்சர் சமல் ராஜபக்ஸ, மற்றும் முன்னாள் அமைச்சரும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ மூலமும் முன்னேடுப்புக்களை தொடருகின்றோம்.

பல விமர்சனங்களையும் தாண்டி கல்முனை வாழ் தமிழ் மக்களின் நியாயமான நீதியான ஏற்றுக் கொள்ளக் கூடிய கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். அது நிச்சயமாக தற்போதைய அரசாங்கத்தினால் முடியும்.

No comments:

Post a Comment