சினோபார்ம் தடுப்பூசிக்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை : சுகாதார அமைச்சு வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுகிறது - சுகாதாரக் கொள்கைகள் ஸ்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 5, 2021

சினோபார்ம் தடுப்பூசிக்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை : சுகாதார அமைச்சு வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுகிறது - சுகாதாரக் கொள்கைகள் ஸ்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்

(நா.தனுஜா)

சினோபார்ம் தடுப்பூசிக்கு இன்னமும் மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே இவ்விடயம் தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் எழுப்பப்பட்டுள்ள கேள்வி முற்றிலும் சரியானது அல்ல என்று சுகாதாரக் கொள்கைகள் ஸ்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ரவி ரன்னன் எலிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் குறிப்பிடுகையில், சினோபார்ம் தடுப்பூசிக்கான அனுமதி தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் எழுப்பப்பட்டுள்ள கேள்வி முற்றிலும் சரியானது என்று நான் கருதவில்லை. 

நானறிந்த வரையில் மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் சினோபார்ம் தடுப்பூசிக்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை. 

நேற்று 'டெய்லி மிரர்' பத்திரிகைக்கு வழங்கியிருந்த நேர்காணலில் அமைச்சர் சன்ன ஜயசுமனவும் உறுதிப்படுத்தியிருந்தார்.

அதுமாத்திரமன்றி இலங்கையர்களுக்கு வழங்கப்படும் தடுப்பு மருந்து தொடர்பான விபரங்கள் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவின் இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்விடயத்தில் சுகாதார அமைச்சு வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுகிறது.

அந்தத் தடுப்பூசிகள் 2,000 சீனர்களுக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் சர்ச்சை காணப்படுகின்றது. 6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் பெறப்பட்டதாகவும் அவற்றில் எஞ்சியுள்ள தடுப்பூசிகள் மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் அனுமதியளிக்கப்பட்டதன் பின்னரே பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். ஆகவே இவ்விடயத்தில் வெளிப்படைத்தன்மை உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment