அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இணுவில் மஹாதேவக் குருக்கள் பாராட்டு - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 26, 2021

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இணுவில் மஹாதேவக் குருக்கள் பாராட்டு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொரோனாவால் பாதிப்புறும் அந்தண சிவாச்சாரியார்களுக்கு தனியான பிரிவை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக இணுவில் தர்ம சாஸ்தா குருகுல அதிபர் சிவஶ்ரீ தாணு மஹாதேவக் குருக்கள் அமைச்சருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

புத்தசாசன மத விவகார மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் இந்துமத அலுவல்கள் விவகார இணைப்பாளர் கலாநிதி இராமசந்திரக் குருக்கள் பாபுசர்மா அண்மையில், கொரோனாவால் பாதிக்கப்படும் அந்தண சிவாச்சாரியார்களுக்கு சிகிச்சை நிலையங்களில் ஒரு தனியான பிரிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்ததற்கமைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரிய தரப்பினருடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கென தனியான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்.

இது அந்தண சிவாச்சாரியார்களுக்கு அமைச்சர் ஏற்படுத்திக் கொடுத்த ஒரு கெளரவத்துக்குரிய விடயமாகும். அதற்காக நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதாக இணுவில் தர்ம சாஸ்தா குருகுல அதிபர் சிவஶ்ரீ தாணு மஹாதேவக் குருக்கள் அமைச்சருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடமாகாண அந்தண சிவாச்சாரியார்கள் அமைச்சருக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad