வெசாக் புனித தினத்தில் புண்ணிய செயல் ; வைத்தியர் மலரவனுக்கு தென்னிலங்கையில் பாராட்டு - News View

About Us

About Us

Breaking

Saturday, May 29, 2021

வெசாக் புனித தினத்தில் புண்ணிய செயல் ; வைத்தியர் மலரவனுக்கு தென்னிலங்கையில் பாராட்டு

வெசாக் காலப்பகுதியை முன்னிட்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் விசேட கண் வைத்தியர் எம். மலரவன் விசேட நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

பல்வேறு கண் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள மிகவும் ஏழ்மையான 2000 பேருக்கு கண் சத்திர சிகிச்சை செய்யும் புண்ணிய செயலை அவர் ஆரம்பித்துள்ளார்.

தென்னிலங்கை மக்களுக்கு மிகவும் பிடித்த மற்றும் நெருக்கமான தமிழ் வைத்தியராக மலரவன் உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாண வைத்தியசாலையில் ஒவ்வொரு வருடமும் வெசாக் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கும் வைத்தியர் மலரவன் தவறமாட்டார் என குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இம்முறை வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது முழுமையான நேரத்தையும் பல்வேறு கண் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 2000 நோயாளிகளுக்கு இலவசமாக சத்திர சிக்சை செய்யப்படவுள்ளது.

சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் அதிகமானோர் தெற்கில் விவசாயம் செய்து வாழும் சிங்கள விவசாயிகள் என அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment