இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு பயணத்தடை விதித்தது மலேசியா - News View

About Us

About Us

Breaking

Sunday, May 9, 2021

இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு பயணத்தடை விதித்தது மலேசியா

இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கான பயணத்தடை உத்தரவினை மலேசியா பிறப்பித்துள்ளது.

அதன்படி இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு மே 8 ஆம் திகதி முதல் மலேசியாவிற்குள் உள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

குறித்த நாடுகளில் அதிகரித்து வரும் கொவிட்-19 பரவல் காரணமாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும் 1961 ஆம் ஆண்டின் இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா மாநாட்டில் கூறப்பட்டுள்ளபடி, இராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த தடையுத்தரவில் விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக மலேசியாவின் சிரேஷ்ட அமைச்சர் இஸ்மாயில் யாகூப் சுட்டிக்காட்டினார்.

மலேசிய போக்குவரத்து அமைச்சகம் ஏப்ரல் மாதத்தில் இந்திய பிரஜைகள் மற்றும் பயணிகளின் நுழைவைத் தடுத்து நிறுத்தியதுடன், தெற்காசிய நாட்டிலிருந்து கப்பல்கள் வருகைக்கும் கடும் கட்டுப்பாடுகளை பிறப்பித்தது.

No comments:

Post a Comment