நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு, நோயாளர்கள் மருந்து வகைகளை தமது வீடுகளுக்கே வரவழைத்து பெற்றுக் கொள்ள  விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நோயாளர்களின் நலன்கருதி குறித்த வசதியை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் ஏற்படுத்தியுள்ளது.
அதற்கமைய, கண்டி, குருணாகல், கொழும்பு - 1, கொழும்பு - 4, கொழும்பு - 7, கம்பஹா ஆகிய பிரதேசங்களில் உள்ளவர்கள் மருந்து வகைகளை பெற்றுக் கொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, குறித்த தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொண்டு மருந்துகளை தத்தமது வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக் கொள்ள முடியும் என மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது
கண்டி             -  070 19 02 737
பேராதனை    -  070 19 02 739
குருணாகல்    -  070 17 18 318
கொழும்பு 01  -  070 19 02 740
கொழும்பு 04  -  070 19 02 741
கொழும்பு 07  -  070 19 02 742
கம்பஹா         -  070 19 02 773
 
 
 

 
.jpg) 
 
 
 
 
No comments:
Post a Comment