ஆங்காங்கே காணப்படும் வெடிபொருட்களால் அச்சத்தில் மக்கள் - News View

Breaking

Post Top Ad

Saturday, May 1, 2021

ஆங்காங்கே காணப்படும் வெடிபொருட்களால் அச்சத்தில் மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு மூன்றாம் கண்டம் பகுதியில் உள்ள இலிங்கேஸ்வரன் என்பவருடைய வயல் காணியில் கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வயல் காணிக்குள் கைக்குண்டு இருப்பதை அவதானித்த குறித்த காணி உரிமையாளரால் முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் முள்ளியவளை பொலிஸார் குறித்த கைக்குண்டை சென்று பார்வையிட்டுள்ளதோடு நீதிமன்ற அனுமதியைப் பெற்று தகர்த்தளிப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த நபரின் காணியில் இருந்த குண்டை பார்வையிட சென்றவேளை இன்னுமொரு குண்டும் இருப்பது பொலிஸாரால் நேற்று (01) இனம் காணப்பட்டுள்ளது.

மக்கள் குறித்த பகுதிகளில் இருந்து வெளியேறி மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது வெடிபொருட்கள் அகற்றியதாக தெரிவிக்கப்பட்ட குறித்த பகுதிகளில் தொடர்ச்சியாக இவ்வாறு வெடிபொருட்கள் காணப்படுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் குறித்த தண்ணிமுறிப்பு பகுதியில் 10 ஆர் பி ஜி குண்டுகள் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு நிருபர் தவசீலன்

No comments:

Post a Comment

Post Bottom Ad