போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது..! - News View

Breaking

Post Top Ad

Sunday, May 30, 2021

போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது..!

(எம்.மனோசித்ரா)

முகத்துவாரம், முல்லேரியா மற்றும் அங்குலானை ஆகிய பிரதேசங்களில் ஹெரோயினுடன் இரு பெண்கள் உள்ளிட்ட 4 சந்தேக நபர்கள் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

முகத்துவாரத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த 23 வயதுடைய யுவதியொருவர் பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தபட்டபோது அவரிடமிருந்து 11 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த யுவதி களனி - பட்டியசந்தி பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

அத்துடன் முல்லேரியா பொலிஸாரால் 3 கிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதேவேளை அங்குலானை பொலிஸாரால் 9 கிராம் ஹெரோயினுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad