யாழில் திட்டமிடப்பட்ட தேசிய வெசாக் திருவிழா இடைநிறுத்தம் - News View

Breaking

Post Top Ad

Saturday, May 8, 2021

யாழில் திட்டமிடப்பட்ட தேசிய வெசாக் திருவிழா இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம், நயினாதீவு ஶ்ரீ நாகதீப ரஜமஹா விகாரையில் நடைபெறவிருந்த அரச வெசாக் திருவிழா, கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அசர வெசாக் திருவிழா, வடக்கு - கிழக்கு மாகாணங்களை முன்னிலைப்படுத்தி, இம்மாதம் 23 முதல் 28 வரை, நாகதீப ரஜமஹா விகாரையில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோரின் பங்களிப்புடன், கொழும்பில் அதனை அடையாள ரீதியாக நடாத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி, புத்தசாசன அமைச்சினால் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad