மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை என்கிறார் ரமேஷ் பத்திரன - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 25, 2021

மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை என்கிறார் ரமேஷ் பத்திரன

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள இந்த காலப்பகுதியில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் அமைச்சரவை இணை பேச்சாளருமான அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (25) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போது, இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ,இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் அனைத்து மக்களும் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றனர் இது அளப்பெரியதாகும்.

கொவிட் 19 வைரசு தொற்றுபரவலின் இரண்டாவது அலையை நாடு எதிர்கொண்டபோது பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருள் விநியோக முறை மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றது. 

இருந்த போதிலும், இம்முறை வாகனங்களில் நடமாடும் வியாபார முயற்சியில் ஈடுபடுவோர் சற்று தயக்கம் காட்டியுள்ளனர். இவர்களுக்கு பிரதேச ரீதியில் வியாபாரம் செய்வதற்கு அனுமதியளித்தாலும் கூட அவர்கள் அதற்கான ஆர்வமின்றி இருக்கின்றார்கள். 

இதனால் ஒரு பிரதேசத்திற்கு ஒரு கிராம சேவகர் அதிகாரி பிரிவிற்கு இரண்டு நடமாடும் வியாபார நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள இன்றையதினத்தில் வாகனங்களை பயன்படுத்துவது தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடானது, பாரிய வாகன நெரிசலொன்று ஏற்படுவதை குறைப்பதற்கேயாகும். 

எனவே இந்த தொற்று நோய் பரவல் காரணமாக நாடு மிகவும் மோசமான நிலையை எதிகொண்டிருப்பதினால் இதுதொடர்பான சட்ட விதிகளுக்கு மதிப்பளிக்குமாறும் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதன்போது மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment