மிருகக்காட்சிசாலைகள், சரணாலயங்களுக்கும் பூட்டு - News View

Breaking

Post Top Ad

Monday, May 3, 2021

மிருகக்காட்சிசாலைகள், சரணாலயங்களுக்கும் பூட்டு

தேசிய மிருகக் காட்சிசாலை திணைக்களம், சரணாலயங்கள் திணைக்களம், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், வனப் பாதுகாப்பு திணைக்களம் ஆகிய திணைக்களங்களின் கீழுள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களும், மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாளை (04) முதல் தெஹிவளை மிருகக் காட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம் பின்னவல மிருகக் காட்சிசாலை, ரிதியகம சபாரி பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்காக்களும் இவ்வாறு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 2ஆம் அலையைத் தொடர்ந்து மூடப்பட்ட அனைத்து மிருகக்காட்சிசாலைகளும் கடந்த பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad