இலங்கையில் 70 இற்கும் மேற்பட்ட தாதியருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Saturday, May 8, 2021

இலங்கையில் 70 இற்கும் மேற்பட்ட தாதியருக்கு கொரோனா

(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ் நாட்டில் மிக வேகமாக பரவிவரும் சூழலில், நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் பணியாற்றும் 70 இற்கும் மேற்பட்ட தாதியர்களும் குறித்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நாட்டில் இதுவரை சுமார் 70 இற்கும் அதிகமான தாதியர்கள் பல்வேறு வைத்தியசாலைகளில் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளமை முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப் பிரிய தெரிவித்தார்.

இதில், திருகோணமலை வைத்தியசாலையில் 17 தாதியரும், ராகமை வைத்தியசாலையில் 8 தாதியரும், கேகாலை வைத்தியசாலையில் நான்கு தாதியரும், குருணாகல் வைத்தியசாலையில் மூன்று தாதியரும், கராபிட்டிய வைத்தியசாலையில் நான்கு தாதியருமாக நாட்டில் பல வைத்தியசாலைகலில் இருந்து கொவிட் தொற்றுக்குள்ளான தாதியர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment