மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா : 6 வீதிககள் முடக்கம் : தொற்று அதிகரிப்பதால் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 13, 2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா : 6 வீதிககள் முடக்கம் : தொற்று அதிகரிப்பதால் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 44 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் கிரான்குளம் பிரதேசத்திலுள்ள கிரான்குளம் கிராம சேவகர் பிரிவு சி, மற்றும் பி பிரிவுகளில் உள்ள 6 வீதிகள் இன்று வியாழக்கிழமை (13) தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளது என மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கூட்டம் இன்று மவட்ட செலகத்தில் இடம்பெற்றது இதில் எடுக்கபட்ட தீர்மானம் தொடர்பாக ஊடகங்களுக்கு அறிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 13 பேரும், ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் 7 பேரும், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 2 பேரும் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 2 பேரும் மற்றும் பொலிசார் இராணுவத்தினர் உட்பட 13 பேர் உட்பட 44 பேருக்கு கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கிரான்குளம் கிராம சேவகர் பிரிவு சி பிரிவிலுள்ள நெசவு நிலைய வீதி, வேலாப்பொடி வீதி, கண்ணனி அம்மன் ஆலைய வீதியும், கிரான்குளம் கிராம சேவகர் பிரிவு பி பிரிவிலுள்ள லோக்றோட் வீதி, விதானையார் வீதி, அப்புகாமி வீதிகள் ஆகிய வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளன.

நாளாந்தம் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்து சுகாதார நடைமுறைகளை பேணி அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களிம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment