இந்தியாவில் கொரோனா தொற்று அவசர உதவிக்கு ஒக்சிஜன் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், லக்னோவில் ஒக்சிஜன் சிலிண்டர் வெடித்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் சின்ஹாட் என்ற பகுதியில் ஒக்சிஜன் நிரப்பும் மையம் உள்ளது.
இன்று காலியான சிலிண்டரில் ஒக்சிஜன் ஏற்றிக் கொண்டிருக்கும்போது, திடீரென சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயம் அடைந்த ஆறு பேரில் இருவர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையிலும், நான்கு போர் மற்றொரு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த கூடுதல் கலெக்டர், கூடுதல் டிசிபி, தலைமை தீயணைப்பு ஆய்வலர், மருந்து ஆய்வலர், கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநில முதல்வர் உயிரழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment