விரைந்த சேவையால் நிலையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த கல்முனை மாநகர தீயணைப்பு படையினர் - 35 லட்சம் ரூபா மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் - News View

About Us

About Us

Breaking

Friday, May 14, 2021

விரைந்த சேவையால் நிலையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த கல்முனை மாநகர தீயணைப்பு படையினர் - 35 லட்சம் ரூபா மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

நூருள் ஹுதா உமர், பாரூக் சிஹான்

சம்மாந்துறை பொலிஸ், நிந்தவூர் பிரதேச செயலக மற்றும் சபை எல்லைக்குட்பட்ட செயின் முஹம்மட் ஜெமீல் என்பவருக்கு சொந்தமான கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையம் அதன் அருகில் இருந்த மரத்தளபாட வேலைத்தளம் ஒன்றும் இன்று இரவு 7.50 மணியளவில் தீக்கிரைக்கு இலக்காகி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

கல்முனை மாநகர சபைக்கு கிடைக்கப் பெற்ற அழைப்பை ஏற்று 08 நிமிடங்களுள் விரைந்து வந்த கல்முனை மாநகர தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். 

இதன்போது களத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் ஆஷ்ரப் தாஹீர் தேவையான அனைத்து வகையான முன்னெடுப்புக்களையும் செய்தார். 

இதன்போது கருத்து தெரிவித்த வர்த்தகர் சில மாதங்களுக்கு முன்னர்தான் இந்த வர்த்தக நிலையத்தை திறந்ததாகவும் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment