ஊவா மாகாணத்தில் உள்ள அரச கட்டிடங்களின் கூரைகளின் மேல் சூரிய சக்தி மின் உற்பத்தி வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் தலைமையில் இன்று ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மின்சார சபையுடன் இணைந்ததாக GAIA Green Energy UVA Pvt (Ltd.) எனும் தனியார் நிறுவனத்துடன் 20 வருட காலத்திற்காக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஊவா மாகாணத்திற்கு சொந்தமான பாடசாலைகள், வைத்தியசாலைகள், மாகாண சபை கட்டிடங்களில் காணப்படும் கூரைகளைச் சாதகமாகப் பயன்படுத்தி மாகாண சபைக்கு சுமார் 40 MV இற்கும் மேலான மின்சாரத்தை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கமைய குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரம் மாகாண சபைக்கு ஒரு வருடத்திற்கு சுமார் 225 மில்லியன் ரூபாய்கள் கிடைக்கப் பெறவுள்ளன.
அத்துடன் இந்த பாரிய வேலைத்திட்டத்தின் ஊடாக மாகாண சபையின் கீழ் புதிதாக சுமார் 500 வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன.
இந்த நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில், GAIA Green Energy UVA Pvt (Ltd.) நிறுவனத்தின் பணிப்பாளர் சிவாஜி டி சொய்ஸா உள்ளிட்ட நிறுவனத்தின் பிரதானிகள், ஊவா மாகாண பிரதான செயலாளர் திரு. P.B. விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் நிஹால் குணரத்ன உள்ளிட்ட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment